என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு மருததுவமனை"
- அரியானாவில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அமல்.
- தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் என முதல் மந்திரி தெரிவித்தார்.
சண்டிகர்:
அரியானாவில் கடந்த 5-ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் அந்தக் கட்சி முதல் முறையாக 48 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, 2வது முறையாக அரியானா மாநில முதல் மந்திரியாக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.
இந்நிலையில், பா.ஜ.க.வின் முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, செய்தியாளர்களைச் சந்தித்த மாநில முதல் மந்திரி நயாப் சிங் சைனி கூறியதாவது:
முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் நான் கையெழுத்திட்ட முதல் கையெழுத்து சிறுநீரக நோயாளிகள் தொடர்பானது.
அரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.
தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம். டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது அரியானா அரசு அந்த செலவை ஏற்கும் என தெரிவித்தார்.
- சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்தார்.
- அமைச்சர் பண்ணைக்காடு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை பண்ணைக்காடு அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சுகாதார த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆஸ்பத்திரியை மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:-
பண்ணைக்காடு அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்த ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. இங்கு மகப்பேறு டாக்டர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் ஆஸ்பத்திரியில் உரிய ஆய்வுகள் மேற்கொ–ள்ளப்பட்டு பல்வேறு மே–ம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது என்றார். அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்